அந்தியூர் டிச 17:

தமிழகத்தில் கூட்டுறவு துறை சார்பில் 70 இடங்களில் மருந்தகம் செயல்படுத்தும் வகையில் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் திறப்பு விழா நடத்தி விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்த அறிவிப்பில் கூறியபடி ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா வெள்ளித்திருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை கடன் சங்கத்தில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி தலைமை வகித்த குத்துவிளக்கு ஏற்றினார்.

அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், மருந்தகத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.கோபி சரக துணை பதிவாளர் ப.கந்தராஜா, கூட்டுறவு சார் பதிவாளர் ப.சண்முகம், சுரேஷ், சங்க தலைவர் குமாரசாமி, வெள்ளித்திருப்பூர் பஞ்., தலைவர் கே.வி.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். https://www.tncu.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today