ஈரோடு சூலை 08:

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணியம், பொது செயலாளர் எஸ்.மாணிக்கம் ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். பின்னர் அவர்கள் கூறியது:

ஈரோடு மாநகராட்சியில் சுகாதார பணியில், 1,800 பேர் பணி செய்கின்றனர். இவர்களில் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், டெங்கு, மலேரியா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள டி.பி.சி, பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரித்தல், சுகாதார மேற்பார்வையாளர்கள், குடிநீர் வினியோகிப்போர், பிளம்பர், கணினி இயக்குனர், டே்டடா என்ட்ரி ஆப்ரேட்டர் என பணி செய்கின்றனர்.

இவர்களில் ஆயிரத்து 400 பேர் நிரந்தரப்படுத்தப்படாத தொழிலாளர்கள் ஆவார்கள். இதுபோல நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்து அமைப்பிலும் நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவர்களுக்கான ஊதியம், அரசின் குறைந்த பட்ச கூலி சட்ட நிர்ணயத்தைவிட குறைவாகும். இதுபற்றி துப்புரவு பணியாளர் தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மானி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி, அதனை ஏற்றனர்.

இதன்படி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் 676 ரூபாய், நகராட்சியில் 562 ரூபாய், பேரூராட்சியில் 484 ரூபாய், கிராம பஞ்சாயத்துக்களில் 400 ரூபாய் என தீர்மானிக்கப்பட்டது.இதன்படி ஈரோடு மாநகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஓட்டுனர்களுக்கு 710 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பட்டதாரிகளான சுகாதார மேற்பார்வையாளர்கள், கணினி அறிவியல் படித்த கணினி இயக்குனர், டேட்டா என்டரி ஆப்ரேட்டர்களுக்கு 676 ரூபாய் ஊதியமாக வழங்குகின்றனர். அதுபோல, பிற உள்ளாட்சி அமைப்பிலும் முரண்பாடு உள்ளதை சரி செய்து, இவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், என வலியுறுத்தினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today