ஈரோடு ஆக 17:
ஊராளி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஊராளி மக்கள் சங்கத்தின் தலைவர் மாதேவன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட குத்தியாலத்தூர், குன்றி, குத்தம்பாளையம், மாக்கம்பாளையம், திங்களுர் ஆகிய கிராமங்களில் ஊராளி பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.
பல ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா இல்லாமல் உள்ளோம். எங்கள் ஊராளி பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, குடிநீர், சாலை வசதி, மாயனம், குழந்தைகள் நல மையம் அமைத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாய நிலங்களுக்கு பட்டாவும் வழங்க வேண்டும். அதேபோல், கடம்பூர் மலைப்பகுதியில் கெம்பநயக்கபாளையம் முதல் கடம்பூர் வரை உள்ள வன சாலையையும், மாக்கம்பாளையம் வன சாலையையும் தார் சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனா்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today