ஈரோடு ஆக 12:

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டு கல்வி இயக்கம் சார்பில் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் பரப்புரை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநில நெறியாளர் கண. குறிஞ்சி நிர்வாகிகள் நிலவன், ரத்தினசாமி, ரவிச்சந்திரன், பொன்.பூபதி, சுரேஷ், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, கருப்பு கொடி மற்றும் கோரிக்கை அட்டைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today