ஈரோடு அக் 4:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வந்தது. கலெக்டர் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்து வந்தார்.குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்டம் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்நிலையில் கொரோனா மற்றும் தேர்தல் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த பிப்., மாதம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது மனுக்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டு சென்றனர். தற்போது கொரோனா தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதால் இன்று முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். கொரோனா காலகட்டம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. புகார் தெரிவிக்க வரும் மக்கள் தனித்தனியாக அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டும் சமூக இடைவெளி கடை  பிடிக்கும் வகையிலும் இருக்கைகள் தனித்தனியாக போடப்பட்டிருந்தன. பின்னர் மனு கொண்டு வந்த மக்கள் பதிவு செய்து கொண்டனர். அதன் பின்னர் தனித்தனியாக மக்கள் டி.ஆர்.ஓ.,விடம் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 7 மாதங்களுக்கு பிறகு இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/