ஈரோடு ஆக 13:

ஈரோடு மாநகரில் கட்டுப்பாட்டினை மீறி திறக்கப்பட்ட 18 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அதில் 5 கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.ஈரோடு மாநகராட்சியில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த கடந்த 9ம் தேதி முதல் நேர கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பால், மருந்தகங்கள், ஓட்டல்கள் தவிர பிற கடைகள் மாலை 5 மணிக்கு மேல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரக்கட்டுப்பாட்டினை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் உத்தரவின்பேரில், நேற்று முன்தினம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, நேரக்கட்டுப்பாட்டினை மீறி திறக்கப்பட்டிருந்ததாக ஜவுளி, டீ கடைகள் என 18 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் என ரூ. 90ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், 5 கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதேபோல், முக கவம் முறையாக அணியாத 117பேருக்கு தலா ரூ.200 என ரூ.23ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today