ஈரோடு சூலை 29:
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்துக்கு தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த வளாகத்தை தூய்மையாகவும் அழகாகவும் வைக்கும் நோக்கத்தில் மருத்துவமனை கட்டிடங்களை ஒட்டி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. ஈரோட்டை சேர்ந்த ஏ.ஜெ.எஸ். அறக்கட்டளை மூலம் வேலி அமைக்கப்பட்டு, உள் பகுதியில் பல்வேறு வகையான செடிகள் நடப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜி.எஸ்.கோமதி தலைமை தாங்கினார். அரிமா சங்க நிர்வாகி என்.முத்துசாமி பூங்கா கல்வெட்டியை திறந்து வைத்தார். கே.எஸ்.ஆர். கல்லூரி முதன்மை அதிகாரி ஆர்.தியாகராஜா பூங்காவை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் டி.கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஏ.ஜெ.எஸ். அறக்கட்டளை நிர்வாகி ஏ.ஜெ.சரவணன் வரவேற்றார். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today