ஈரோடு அக்.16:

கொரோனா தொற்றினால் பலியான பெற்றோரின் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 356 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யவும், அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கொரோனா காரணமாக தாய் தந்தை இருவரையும் இழந்த அல்லது ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி பெறுவதற்காக 356 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கெநிதி உதவி பெறுவதற்காக 356 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

இதில் பெற்றோர் இருவரையும் இழந்த 11 குழந்தைகளும், ஒற்றை பெற்றோரை இழந்த 345 குழந்தைகளும் என 356 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 69 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 287 குழந்தைகளின் கருத்துருவில் 143 விண்ணப்பங்கள் உரிய சான்றுதலுக்காக காத்திருப்பில் உள்ள நிலையில், 144 விண்ணபங்கள் சமூக பாதுகாப்புதுறை சார்பில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் விரைவில் நிதி உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/