ஈரோடு நவ 29:
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி ஓவியப்போட்டி கடந்த 24ம் தேதி நடைபெற்றது. இதில், 3ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவ-, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 17 பள்ளிகளை சேர்ந்த 250 மாணவ-, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
இதைத்தொடர்ந்து அருங்காட்சியகத்தில் ஓவியக் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அன்புசெழியன் பங்கேற்று ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெற்ற மூன்று மாணவ – மாணவிகள் என 9 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. https://www.iccr.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/