ஈரோடு ஆக 19:

வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாயைம் கிராமத்தில் நடந்தது. முகாமுக்கு டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார்.

முகாமில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கணேசன் கலந்துகொண்டு அங்கக வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி மற்றும் பூச்சி நோய் மேலாண்மை குறித்து பேசினார். தொடர்ந்து வேளாண்மை அதிகாரி ஜமுனாதேவி கலந்துகொண்டு வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். இதில் உதவி வேளாண்மை அதிகாரி ஸ்ரீநாத், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் விஸ்வநாதன், மணிகண்டன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஏளுர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தனியார் நிறுவன மேலாளர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு நுண்ணீர் பாசன கருவிகளை அமைப்பது, பராமரிப்பது குறித்து பேசினார். இதில் துணை வேளாண்மை அதிகாரி ஈஸ்வரமூர்த்தி, உதவி வேளாண்மை அதிகாரி கங்காதேவி மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today