Erode Oct 7:

பாரத  பிரதமரின் பராமரிப்பு நிதி மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்தார்.ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை  வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்  துறையின் சார்பில், பாரத பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன்  உற்பத்தி செய்யும் பிராண வாயு உற்பத்தி மையத்தினை  மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்த 2 கலன்கள் ஆக்சிஜன் யூனிட் மூலம் நிமிடத்திற்கு  500 லிட்டர் என, 1,000 லிட்டர் ஆக்ஸிஜகளை உற்பத்தி செய்யலாம்.இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு  வழங்கப்பட்டுள்ளது. இந்த அலகு மூலம் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தலா 10 லிட்டர் வீதம் குறைந்த பட்சம் 100 நோயாளிகளுக்கு ஒரேநேரத்தில் பயன்படுத்தும் அளவிற்கு  அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் 96 சதவீதம் தூய்மை தன்மை கொண்டது என  நிரூபிக்கப்பட்டுள்ளது, என  தெரிவித்தார். https://www/.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/