ஈரோடு ஆக 16:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் இரட்டை படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் முதல் போக நன்செய் பாசனத்துக்கு வரும் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. மொத்தம் ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் வரும் டிசம்பர் 12ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். மொத்தம் 23,846.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து, தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today