ஈரோடு அக் 3:

ஈரோடு அருகே உள்ள அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வரும் கசிவு நீர் மூலமும், மழை நீர் மூலமும் ஈரோடு அணைக்கட்டுக்கு தண்ணீர் வந்து சேரும். அங்கு சேகரமாகும் தண்ணீர், ஈரோடு மற்றும் இந்த அணைக்கட்டு நீர் மூலம் பாசனம் பெறும் பகுதிக்கு நீராதாரமாகவும், குடிநீர் தேவைக்கும் பயன்படும். இந்நிலையில் நேற்று தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு முன்னிலையில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெகதீசன் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் மூலம், காசிபாளையம், ஈரோடு, நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், 46புதூர் பகுதியில், 2,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும். அப்பகுதியில் குடிநீர், நிலத்தடி நீர் செரிவூட்டவும் பயன்படும். கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் நாட்கள் முழுமையாக இந்த அணைக்கும் தண்ணீர் வரத்தாகி, பாசனத்துக்கு செல்லும், என அதிகாரிகள் தெரிவித்தனர். http://www.wrd.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/