ஈரோடு சூலை 23:

பவானி அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து நீர்வள ஆதாரத்துறை மூலம், பாசனத்துக்காக விவசாயிகள் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு அணையில் உள்ள நீர் இருப்புக்கு ஏற்ப, பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி 21ம் தேதி முதல் நவம்பர் 17 ம் தேதி வரை 120 நாட்களுக்கு தினமும் 400 கனஅடி நீர் வீதம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. காலிங்கராயன் பாசன விவசாயிகள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அருள், உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் தினகரன், காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today