ஈரோடு சூன் 29. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் உட்பட சில கோவில்கள் ஒருங்கிணைந்து உள்ளன. இவை அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள். இக்கோவில் உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படும். இதன்படி நேற்று இக்கோவில்களின் உண்டியல்கள் திறந்து, பெரிய மாரியம்மன் கோயிலில் வைத்து எண்ணினர். அனைத்து உண்டியலும் சேர்த்து 4.20 லட்சம் ரூபாய், இரண்டு வெளிநாட்டு கரன்சி, சில தங்க வெள்ளி பொருட்கள் இருந்தன. இவை அனைத்தும் அறநிலையத் துறை கணக்கில் சேர்க்கப்பட்டது. வழக்கமாக கோவில் திறக்கும் காலங்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உண்டியல் வருவாய் கிடைக்கும். கடந்த 45 நாட்களாக கோவிலில் பக்தர் கள் தரிசனத்துக்கு அனுமதிக்காததும், திருவிழா ரத்தானதால் உண்டியல் தொகை குறைந்ததாக தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே