ஈரோடு ஆக 14:
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் கலெக்டர் கொடியை தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு சமாதானத்தைக் குறிக்கும் வகையில் புறாவைப் பறக்க விடுவார்.
இதை தொடர்ந்து முன்கள பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகள் கவுரவிக்கப்படுவார்கள். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும்.இதனை ரசிக்க பொது மக்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் சுதந்திர தின விழா எளிய முறையில் நடந்தது.
கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து முன்கள பணியாளர்களுக்கு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.பொதுமக்கள் நேரடியாக வந்து பார்வையிடுவதற்கும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீட்டுக்கு நேரடியாக கலெக்டர் சென்று சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த வருடம் சுதந்திர தின விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட உள்ளது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:05 மணிக்கு ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் உள்ள தேசிய கொடியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஏற்றி வைக்கிறார்.அதைத் தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடுகிறார். சில முன் கள பணியாளர்களுக்கும் பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கவுரவிக்கிறார். இந்த வருடமும் பொதுமக்களுக்கு சுந்தர தின நிகழ்ச்சியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today