அந்தியூர் டிச 3:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கணக்கம்பாளையத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் உயர் தொழில் நுட்ப முறையில் சிறிய வெங்காய சாகுபடி குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமையேற்று, துவக்கி வைத்தார். ஈரோடு தோட்டக்கலை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வி, தோட்டக்கலையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.

மேலும், கருத்தரங்கில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தை சார்ந்த தோட்டக்கலை பேராசிரியர் முனைவர் ஷோபா திங்கள்மனியன் கலந்து கொண்டு சிறிய வெங்காயத்தில் உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகள் குறித்தும், சிறிய வெங்காய சாகுபடிக்கான மண் வள மேலாண்மை குறித்து மண்ணியல் பேராசிரியர் முனைவர் ரகுநாத், பூச்சி தாக்குதல் மேலாண்மை குறித்து முனைவர் கணேசன், நோய் மேலாண்மை குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக முனைவர் கார்த்திகேயன் ஆகியோர் விளக்கி பேசினர்.

கருத்தரங்கின் முடிவில் டி.என்.பாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திக்குமார் நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். https://www.tnagrisne.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/