ஈரோடு ஆக 17:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர துவங்கி இருப்பதால், கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது.

அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரோட்டில் கடந்த 2 நாட்களாக கோவிசில்டு தடுப்பூசி முதல் டோஸ் மட்டும் இரண்டாம் டோஸ் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக தாளவாடி, நம்பியூர் பவானி, கொடுமுடி,  அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, சித்தோடு உட்பட 181 இடங்களில் 19 ஆயிரத்து 380 பேருக்கு கோவிஷில்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

டோக்கன் அடிப்படையில் 100 முதல் 300 பேர் வரை ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இன்று கோவிஷில்டு முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today