ஈரோடு அக் 15:

சர்வதேச பேரிடர் துயர் துடைப்பு நாளையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பில் சர்வதேச பேரிடர் துயர் துடைப்பு நாளையொட்டி இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி மற்றும் விழிப்புணர்வு குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி செயல்விளக்கம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடைபெற்ற இப்பயிற்சியின் போது, பருவமழை, புயல், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது, பாதுகாப்பு வழிகாட்டி கையேடு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியின் போது, ஈரோடு மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் புளுகாண்டி, தாசில்தார் பாலசுப்பிரமணி, பேரிடர் மேலாண்மை தாசில்தார் அஸ்ரப்நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/