ஈரோடு சூலை 9:

ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை குவிக்கும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ‘செல்பி பாயிண்ட்’ அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் ‘செல்பி பாயிண்ட்’ நேற்று அமைக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டார். இதில் தடகள பயிற்சியாளர் கண்மணி, கால்பந்து பயிற்சியாளர் சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் கூறுகையில், “ஒலிம்பி போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்-, வீராங்கனைகள் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் வகையில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் செல்பி எடுத்து கொண்டு சமூக வலை தளங்களில் பகிர்வதன் மூலமாக ஒலிம்பிக் போட்டி பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படும்”, என்றார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today