ஈரோடு செப் 13:

ஈரோடு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தற்கொலை தடுப்பு குறித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தேசிய நலவாழ்வுத் திட்டம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் உலக தற்கொலை தடுப்பு வாரம் கடந்த 10ம் தேதி முதல் வரும் 17ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஈரோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட மனநலத்திட்டம், இணை இயக்குனர் நலப்பணிகள் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்து, தற்கொலை தடுப்பு உறுதிமொழியை படிக்க, செவிலியர்கள் அந்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் கவிதா, மனநல மருத்துவர் ஆனந்தகுமார், உளவியல் ஆலோசகர் ஜெயபிரகாஷ், மனநல சமூக பணியளர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/