ஈரோடு சூலை 3:

நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் லைசென்ஸ் இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காய்கறி நாற்றுக்கள், பழமர நாற்றுகள், தென்னை நாற்றுகள் ஆகியவை தனியார் நாற்று பண்ணைகளால் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  குறிப்பாக காய்கறிகளான வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. நாற்றுக்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் அனைவரும் விதை விற்பனை நிலைய உரிமம் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகின்றது.

விவசாயிகளின் தேவையை பயன்படுத்தி, தரமற்ற நாற்றுக்களை விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தங்களது நாற்றுப்பண்ணைகளில் தரமான, வீரியமான, நல்ல மகசூல் தரக்கூடிய நாற்றுக்களையே விற்பனை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே