ஈரோடு டிச 25:

நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் உரிமம் பெறாமல் பொதுமக்களுக்கு நாற்றுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் ஜெயராமன், ஆய்வாளர் நவீன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் விதை விற்பனை உரிமம் பெற்ற தனியார் மையங்கள் மூலம் காய்கறி நாற்றுகள், பூ, பழமரக்கன்றுகள் பொதுமக்கள், விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

குறிப்பாக காய்கறிகளான வெங்காயம், தக்காளி, கத்தரி நாற்றுகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றது. நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாற்றுப்பணை உரிமையாளர்கள் அனைவரும் விதை விற்பனை நிலைய உரிமம் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும்.

உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தரமற்ற நாற்றுகளை விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள், விவசாயிகள் காய்கறி நாற்றுகளை வாங்கும் போது, விதை விற்பனை நிலையங்களில் கட்டாயம் ரசீது வாங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today