ஈரோடு நவ 23:

ஈரோடு மாவட்டத்தில் மழையினால் பயிர் சேதம் எதுவும் இல்லை என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக நல்ல மழை பெய்து வருகின்றது.

மழையினால் அந்தியூர் தாலூகாவுக்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர் செப்பனிட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழையினால் குறிப்பிடும் படி பயிர் சேதம் ஏதும் இல்லை என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் மழை பெய்து வந்த போதிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. தொடர்ந்து மழைநீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே பாதிப்பாக கருத முடியும். மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. மழை நின்ற பிறகு பாதிப்பு இருந்தால் கணக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு கூறினர். https://www.tnagrisnetn.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/