ஈரோடு ஆக 10:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை ஆஸ்பத்திரியாக உள்ளது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் இருந்தது. எனவே தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வேண்டுகோளின்படி, ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இணைந்து 69 ஆயிரத்து 200 சதுரஅடியில் 3 தளங்களுடன் கூடிய வளாகம் கட்டும் பணி தொடங்கியது. ரூ.14 கோடியே 50 லட்சம் செலவில் 45 நாட்களில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 401 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளன. மிகக்குறைந்த கால அளவில் அதாவது வெறும் 45 நாட்களில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு நோயாளிகள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இது உலக அளவில் எலைட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. ஆகிய கண்டம் அளவில் ஆசியக் புக் ஆப் ரெக்கார்டு, இந்தியரன் ரெக்கார்டு அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சாதனை புத்தகங்களிலும் இந்த பணி இடம் பெற்று உள்ளது. புதிதாக கட்டப்பட்டு உள்ள இந்த சாதனை வளாகத்தை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது. ரோட்டரி சங்கத்தின் சர்வதேச தலைவர் ஷிகர் தேத்தா கலந்து கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மணியிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today