ஈரோடு செப் 30:

ஈரோடு – சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் விபரங்களை சேகரிக்கும் e––SHRAM போர்ட்டல் உருவாக்குதல், பதிவு செய்ய கோருதல் தொடர்பான அனைத்து தொழிற்சங்க கூட்டம் நடந்தது.

தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம், உதவி ஆணையர் (சமரசம்) முருகேசன், உதவி ஆணையர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் சின்னசாமி தலைமையில், மனு வழங்கி, இப்பதிவுமுறையை நிறுத்தி வைக்கக்கோரினர். அவர்களது மனுவில் கூறியதாவது:இந்த போர்ட்டலில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்ய முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதனை அமல்படுத்த மாநில, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைப்பதாக கூறியுள்ளனர். மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரை இக்குழுவில் இணைக்காமல், மாநில அரசை புறக்கணித்துவிட்டு மாவட்டங்களில் செயல்படுத்த முயற்சிப்பது தவறான முடிவாகும்.

மாநில அரசு 17 நலவாரியங்களை செயல்படுத்தி வருகிறது. இதை தவிர்த்து, மத்திய அரசு நேரடி பதிவை மேற்கொள்வது குறைபாடுகளை ஏற்படுத்தும். அதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளதால், இதனை ஏற்க இயலாது, என தெரிவித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், இப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினர். https://www.tnuwwb.tn.gov.in

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/