ஈரோடு சூலை 22:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை பயிற்சி பிரிவின் வாழ்வியல் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வழிகாட்டுதல்படி ஈரோடு மாவட்டத்தில் புதிய தனியார் ஐ.டி.ஐ, துவங்கவும், ஏற்கனவே உள்ள தனியார் ஐ.டி.ஐ,களில் கூடுதலாக புதிய தொழில் பிரிவுகள் துவங்க விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளனர். இம்மாவட்டத்தில் குறிப்பிட்ட வட்டாரத்தில் ஐ.டி.ஐ, இல்லாவிட்டால் புதிய தனியார் ஐ.டி.ஐ, துவங்கலாம். புதிய பயிற்சி பிரிவுகள் இருக்கும் தனியார் ஐ.டி.ஐ,களின் தொழில் பிரிவில் ஒரு தொழில் பிரிவு பொறியியல் சார்ந்ததாகவும், ஒரு தொழில் பிரிவு புதுயுக பிரிவாக இருக்கும்படி துவங்கலாம். அனைத்து துறைகளிலும் பயிற்சி வழங்கும் விதமாக நடக்கும் ஐ.டி.ஐ,கள், 4 பிரிவுகளுக்கு குறைவாக இருந்தால், புதிய தொழில் பிரிவுகள் துவங்க விண்ணப்பிக்கலாம். நிபந்தனைப்படி துவங்க தடையில்லா சான்று பெற்று, www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம், என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today