பெருந்துறை நவ 19:

ஈரோடு மாவட்டம் திங்களூர் வேட்டையன்கிணறு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக 2 வகுப்பறைகள் கட்டுமான பணிக்கான துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு ரவுண்ட் டேபிள்-98 தலைவர் டாக்டர் வித்யா சரண் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எஸ்.பி., சசி மோகன், டாக்டர்கள் மயிலேறு ரவிந்தரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், தலைவர் விஷ்ணு பிரபாகர், ஊராட்சி தலைவர் சங்கீதா சக்திவேல், பள்ளியின் தலைமை ஆசிரியர் பானுரேகா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகன் சிங், ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் இளங்கவி, பிரவீன், தங்கராஜ், செல்வராஜ், சிவகுமார், அஸ்வின், சவுமியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.tnschools.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/