ஈரோடு டிச 15:

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பண்னை குட்டைகளை புனரமைப்பு செய்து மீன்வளர்ப்பு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் கீழ் 40 சதவீத மானியத்தில் 1,000 சதுர மீட்டர் அளவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகளை புனரமைப்பு செய்து கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை மேற்கொள்ள ஆகும் உள்ளீட்டு செலவினத்தில் 40 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியமும், பண்ணைகுட்டைகளுக்கு பாலித்தீன் உறையிடுதல் மற்றும் மீன்வளர்த்திட ஆகும் உள்ளீட்டு செலவினத்தில் 40 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் மானியமும், விரால் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினத்தில் 40 சதவீத மானியம்  அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

மேலும், பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்கள் மற்றும் கல்குவாரியில் உள்ள நீர் நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன்வளர்ப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 40 சதவித மானியம் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் அதிக பட்சமாக ரூ.1.80 லட்சம் வழங்கப்படும்.விருப்பமுள்ள விவசாயிகள் ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tnhoritculture.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today