ஈரோடு நவ 30:

தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தாளவாடி கிராமம், ஓசூர் ரோட்டில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான பொது வழித்தடத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர்.

இது தொடர்பாக தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி பொதுவழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து சாலையை சேதப்படுத்தியதற்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்த வழித்தடத்தில் யாரும் செல்லக்கூடாது என்று மிரட்டி வருகின்றனர். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tnrd.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/