ஈரோடு ஆக 24:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சிலர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 11 அம்மா உணவகங்கள்  செயல்பட்டு வருகிறது.

இது தவிர பவானி, சத்தி, கோபி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய நகராட்சி பகுதிகளில் 4 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. ஊதிய உயர்வு கேட்டுஅம்மா உணவக பெண் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஈரோடு, ஆக.23-ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சிலர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 11 அம்மா உணவகங்கள்  செயல்பட்டு வருகிறது. இதுதவிர பவானி, சத்தி, கோபி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் 4 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. 

நாங்கள் கடந்த 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை அம்மா உணவகத்தில் பணியாற்றி வருகிறோம். மொத்தம் 158 பேர்  பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.250 வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மாநகராட்சிக்கு உட்பட்ட 11 அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு  நாளொன்றுக்கு ரூ 75 வீதம் சம்பளம் உயர்த்தப்பட்டு ரூ.325 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால் நகராட்சி பகுதிக்குட்பட்ட 4 அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்னும் பழைய முறையிலேயே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. எங்களுக்கும் ரூ.75 சம்பளம் உயரத்தி ரூ.325 ஊதியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் 9 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம் ஆனால் எங்களுக்கு எந்த ஒரு சலுகையும் கிடையாது. கொரோனா காலகட்டத்திலும் கூட நாங்கள் வாழ்வாதாரத்தை பொருட்படுத்தாமல் காலை முதல் இரவு வரை பணி புரிந்தோம்.

அந்த நேரத்தில்  போக்குவரத்து வசதி கூட இல்லாமல் நாங்கள் நடந்தே வேலைக்கு சென்றோம். மேலும் எங்களை முன் களப்பணியாளர்கள்  பட்டியலில் சேர்ப்பதாக கூறி உள்ளனர் ஆனால் இதுவரை சேர்க்கவில்லை. எங்களை முன் களப்பணியாளர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today