ஈரோடு ஜூன் 16: ஈரோடு பெரியார் வீதி அரசு துவக்கப்பள்ளியில், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு மாவட்ட கிளை சார்பில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த ஏழை, எளியவர்களுக்கு அரிசி, வீட்டு உபயோக பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட செயலாளர் வி.எஸ்.முத்துராமசாமி தலைமை வகித்தார்.

ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி மாதேஷ், தி.மு.க., மாவட்ட பொருளாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, அரிசி உள்ளிட்ட பொருட்களை ஏழைகளுக்கு வழங்கினார்.இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பல்வேறு ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே