ஈரோடு டிச 15:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரியவலசு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் கழிப்பிட வசதியை விரிவுபடுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சுவர் கட்டித் தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதே போல பள்ளியில் மாணவர்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்த குடிநீர் சுத்தகரிப்பு மெஷின்களை சரி செய்து கொடுக்கும்படி கூறியதையடுத்து உடனடியாக சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் விஜயபாஸ்கர், ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜயகண்ணா, மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் செந்தில்ராஜா கலந்துக்கொண்டனர். https://www.tnschools.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today