ஈரோடு டிச 16:
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட் 55வது வார்டு வளையக்கார வீதி பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ, இ.திருமகன் ஈவெரா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்பள்ளிக்கான சுற்றுப்புற சுவர் மற்றும் அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பெற்றோர்கள் சார்பில் மனு வழங்கப்பட்டது. பள்ளியின் சுற்றுச்சுவர், சமையல் கூடம் புதிதாக கட்டித்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். தவிர மழை பெய்யும்போது, பள்ளி வகுப்பறைக்குள் மழை நீர் சகிவு ஏற்படுவதால், சுற்றுச்சுவர் விரிசலாக உள்ளதை சுட்டிக்காட்டினர். அவற்றை தொழில் நுட்ப ரீதியாக சரி செய்து, மழை நீர் மேலும் கசியாமலும், சுவர் பாதிக்கப்படாமலும் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். https://www.tnschools.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today