ஈரோடு சூன் 28: ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, அரச்சலூர், கவுந்தப்பாடி பகுதியில் நாட்டு சர்ச்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது .இவற்றில் வெள்ளை சர்க்கரை, கெமிக்கல் உட்பட பல பொருள் கலப்படமாக சேர்ப்பதும்,  விற்பனை செய்வதும் வாடிக்கையாக நடக்கிறது. எப்போதாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இதன் படி நேற்று மொடக்குறிச்சி, அரச்சலூர், கவுந்தப்பாடி உட்பட பல இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் உட்பட பலர் சோதனை நடத்தினர். அங்கு வெள்ளை சர்க்கரை கலப்படமாக சேர்க்க வைத்திருந்த 1500 கிலோ வெள்ளை சர்க்கரையை பறிமுதல் செய்தனர். மேலும் கலப்படமாக தயாரித்த 1800 கிலோ அச்சு வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது. தவிர ஒவ்வொரு இடத்திலும் தலா மூன்று மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே