மொடக்குறிச்சி நவ 17:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூன்று இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 5,790 பயனாளிகளுக்கு ரூ.56.97 லட்சம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

 மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூர் பேரூராட்சி பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கிருணுணனுண்ணி தலைமையில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி முன்னிலையில் 1,333 பயனாளிகளுக்கு ரு.13.41 லட்சம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகளை வழங்கினார்.பின், அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:

தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரையில் அறச்சலுார், ஈஞ்சம்பள்ளி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய மூன்று பகுதிகளில் உள்ளது.மேலும் அவர்கள் பாதுகாப்பாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம் மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 499 இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.95 லட்சம் மதிப்பீட்டில் துணிகள், 171 குடும்பங்களுக்கு ரூ.2,19,735 மதிப்பிலான பாத்திரங்களும், 37 குடும்பங்களுக்கு ரூ.1,40,637 மதிப்பிலான எரிவாயு இணைப்புகள் என மொத்தம் 707 பயனாளிகளுக்கு ரூ. 7,55,372 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தவிர, ஈஞ்சம்பள்ளி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 473 இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.57 லட்சம் மதிப்பீட்டில் துணிகள், 140 குடும்பங்களுக்கு ரூ.1,79,900 மதிப்பிலான பாத்திரங்களும், 13 குடும்பங்களுக்கு ரூ.49,413 மதிப்பிலான எரிவாயு இணைப்புகள் என மொத்தம் 626 பயனாளிகளுக்கு ரூ.5,86,813 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் என மொத்தம் 1,333 பயனாளிகளுக்கு ரு.13.41 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 3,152 இலங்கை தமிழர்களுக்கு ரூ.24.17 லட்சம் மதிப்பீட்டில் துணிகள், 1,050 குடும்பங்களுக்கு ரூ.13,49,250 மதிப்பிலான பாத்திரங்களும், 155 குடும்பங்களுக்கு ரூ.5,89,155 மதிப்பிலான எரிவாயு இணைப்புகள் என மொத்தம் 4,357 பயனாளிகளுக்கு ரூ.43,55,405 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மாவட்டம் முழுவதும் மூன்று முகாம்களை சேர்ந்து 5,790 பயனாளிகளுக்கு ரூ.56.97 இலட்சம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு பேசினார். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா, வட்டாட்சியர்கள் சண்முகசுந்தரம் (மொடக்குறிச்சி), மகேஸ்வரி (இலங்கை தமிழர் மறுவாழ்வு) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/