ஈரோடு டிச 17:

மாநில அளவிலான ஜூனியர் பேட் மிட்டன் போட்டியில் ஈரோடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்ததால் அமைச்சர் சு.முத்துசாமி அவர்களுக்கு பரிசு வழங்கினார்.

தமிழ்நாடு பேட் மிட்டன் (பூப்பந்து) கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான ஜூனியர் பேட் மிட்டன் போட்டி இரண்டு நாட்கள் நடந்தது. ஈரோடு மாவட்ட அணி சார்பில், நம்பியூர் சாவக்காட்டுபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிவசுதர்சன், சுரேஷ்குமார் ஆகியோர் விளையாடினர்.

கால் இறுதியில் ஈரோடு அணி – கடலூர் மாவட்ட அணியை 3519;3514 என்ற புள்ளியிலும், அரை இறுதியில் திண்டுக்கல் அணியை, 3533;3532 என்ற புள்ளியிலும் வென்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் ஈரோடு அணி – மயிலாடுதுறை மாவட்ட அணியும் மோதின. இதில் 3634; 3533 என்ற புள்ளி கணக்கில் வென்று சாதனை படைத்தனர்.

சிறந்து விளையாடி முதல் பரிசு பெற்ற சிவசுதர்சன், சுரேஷ்குமார் ஆகியோரை தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்தனர். இவ்விருவரையும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் அழைத்து பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.ஈரோடு மாவட்ட பேட் மிட்டன் கழக புரவலர் ரவீந்திரநாத், செயலாளர் சுல்தான் சையது, தலைவர் பிரகாஷ், இணை செயலாளர் சிவகுமார் ஆகியோர் உடன் சென்றனர். https://www.sdat.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today