சென்னிமலை சூலை 5:

சென்னிமலை ஒன்றிய பகுதியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, எம்.பி, கணேசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு நடந்தது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

சென்னிமலை வட்டாரத்தில் 22 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் தேவையான குடிநீர் தங்குதடையின்றி வழங்க கோரினர். தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தில் உள்ள பல பகுதிகள் வறட்சி பகுதியாக உள்ளன. அவ்விடங்களுக்கு முன் மாதிரியாக குடிநீர் வழங்க ஆய்வு கூட்டம் நடத்த தீர்வு காணப்படும்.

இப்பிரச்னை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்குதல், உள் கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவை செய்யப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைகள் சார்பில் சென்னிமலை ஒன்றியமண், பனியம்பள்ளி பஞ்சாயத்தில் 14வது நிதிக்குழு மானியத்தின் கீழ் புதுப்பாளையம் ஜெ.ஜெ.நகரில் உள்ள திறந்த வெளி கிணற்றில் 1.27 லட்சம் ரூபாய் மதிப்பில் மின் மோட்டார், உதிரி பாகங்கள் அமைத்து குடிநீர் வழங்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பேசினார்.ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரதிக் தயாள், பயிற்சி உதவி கலெக்டர் ஏகம் ஜெ.சிங், சென்னிமலை ஒன்றிய தலைவர் காயத்ரி இளங்கோ, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, உதவி இயக்குனர் – பஞ்சாயத்துக்கள் உமாசங்கர் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www/erode.today