கொடுமுடி ஆக 12:
கொடுமுடி வட்டம் கொல்லன்கோயில், சிவகிரி பேரூராட்சி, அஞ்சூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் புதிய திட்டப்பணிகள் குறித்து வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். கொடுமுடி வட்டம் கொல்லன்கோயில் பகுதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தரைமட்ட பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அதனை உயர் மட்டப்பாலமாக மாற்றி அமைக்கும் சாத்தியங்கள் குறித்து, அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார். பின், சிவகிரி சந்தை பேட்டை, அம்மன்கோயில் பகுதி பொதுமக்கள், கொடுமுடி வட்டம் எழுமாத்தார் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் 1,300 மாணவ, மாணவியர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லுாரியை ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான மகளிருக்கென தனி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்றும் மனு கொடுத்தனர். கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அப்பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பது தொடர்பாக உடனடியாக அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, கல்லூரி அமைக்க வசதி உள்ள, 5 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தினை நேரில் பார்வையிட்டார்.
அந்த இடத்திற்கான முன்மொழிவினை உடனடியாக சமர்பிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின் சிவகிரியில் தினசரி சந்தை அமைப்பது உட்பட பல இடங்களை அவர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு ஆர்.டி.ஓ., பெ.பிரேமலதா, கொடுமுடி வட்டாட்சியர் எஸ்.ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today