ஈரோடு அக் 28:

ஈரோடு மாவட்டத்தில் 7வது மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

ஈரோடு மாவட்டத்தில் 7வது மாபெரும் தடுப்பூசி முகாம் வருகின்ற 29ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. அதில் 1 லட்சத்து 20 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியினை இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tnhealth.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/