ஈரோடு சூலை  22:

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் மாவட்ட செயலாளர் சாந்தி முன்னிலையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் டெய்சி தலைமை வகித்து பேசினார். மாநில துணை தலைவர் மணிமேகலை, மாவட்ட தலைவர் ராதாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.கொரோனா பரவல் பொது முடக்க காலத்திலும், அங்கன்வாடி பணியாளர்கள் முழு அளவில் பணி செய்தனர். அங்கன்வாடி மூலம் உலர் உணவு பொருட்கள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பிற பணிகளாக கொரோனா குறித்த கணக்கெடுப்பு பணி, ஓட்டுச்சாவடி அளவிலான கணக்கெடுப்பு, தடுப்பூசி பணி, பல்வேறு கணக்கெடுப்பு என பல்வேறு பணிகள் வழங்கப்படுகிறது. இதனால், இத்துறை சார்ந்த வழக்கமான பணிகளை செயல்படுத்த முடிவதில்லை. அங்கன்வாடியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அங்கன்வாடி பணி தவிர, பிற பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும், என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today