ஈரோடு நவ 24:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதியான சத்தியமங்கலம், அந்தியூர், தாளவாடி, கோபி, நம்பியூர், மொடக்குறிச்சி, அணைப் பகுதிகளான வரட்டுப்பள்ளம், குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்தது.

ஈரோடு மாநகர் பொருத்தவரை நேற்று பகல் முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை 6 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நம்பியூர், பவானிசாகர், கோபி, குண்டேரிபள்ளம், கொடிவேரி போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்டத்திலுள்ள அணைகள், ஏரி,  குளங்கள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீரும்  உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: மொடக்குறிச்சி 44, நம்பியூர் 32, பவானிசாகர் 28.2, கோபி 27.4, குண்டேரிபள்ளம் 25.2, கொடிவேரி 22.2, கவுந்தப்பாடி 9.4, சத்தி 8, அம்மாபேட்டை 7.8, பெருந்துறை 5, சென்னிமலை 2, வரட்டுப்பள்ளம் 2, கொடுமுடி 1.2. https://www.imdchennai.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/