ஈரோடு ஆக 23:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர். கே. வி ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.ஊ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய 24 பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து இன்றும்  அந்த 24 பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போது பரப்பாக காட்சி அளிக்கும்  ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு போன்ற பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் கோவில், பவானி, சத்தியமங்கலம், தாளவாடி, புளியம்பட்டி உள்பட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மாவட்ட நிர்வாகம் உத்தரவை மீறி கடைகள் எதுவும் திறக்கப்பட்டுள்ளதா? என கண்காணிப்பதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் முக்கியமான கடை வீதிகளில் கண்காணித்து வந்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today