ஈரோடு அக் 8:

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்க உள்ள ஊரகப்பகுதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஓட்டுச்சாவடி, ஓட்டு எண்ணும் மையங்களில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். ஈரோடு ஒரு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், இரண்டு ஒன்றிய கவுன்சிலர், நான்கு பஞ்சாயத்து தலைவர், 13 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தம் 20 பதவிகளுக்கான தேர்தலில் 65 பேர் போட்டியிடுகின்றனர். 144 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு ஓட்டுப்பெட்டிகள், வாக்களிப்பு மறைவு அட்டை, உலோக முத்திரை, பாலித்தீன் உறை, கித்தான் பை, உலோக சட்டம், அம்புக்குறி முத்திரை, கையுறை, முககவசம் என பல்வேறு பொருட்கள் அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோடு யூனியன் அலுவலகம் வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, இப்பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை பார்வையிட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கரை சைக்கள் கூடுதலாக அனுப்பப்பட்டது. பின், யூனியன் அலுவலக கூட்ட அறையில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டதை ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டறிந்தார். பின், மற்ற யூனியன்களில் உள்ள ஓட்டுச்சவாடி மையங்களை பார்வையிட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் தனசேகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுசீலா உட்பட பலர் பங்கேற்றனர். https://www.elections.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/