ஈரோடு நவ 17:

ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காசிபாளையம் பகுதி உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் கொல்லம்பாளையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன், பகுதி செயலாளர்கள் தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக காசிபாளையம் பகுதி செயலாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். https://www.eci.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/