ஈரோடு ஜன 1:

ஈரோடு, பெருந்துறை சாலை, குமலன்குட்டையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் இன்று (31ம் தேதி) மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

பின் கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது; ஈரோட்டில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டம் (தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற இயக்கம்) மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட கட்டாயக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் 14ம் தேதி வரை 15 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில், அனைத்து மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்திப் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இக்கண்காட்சியினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்றார். இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) கெட்சி லீமா அமெலினி, உதவி திட்ட அலுவலர்கள் சாந்தா, அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர். https://www.tnrd.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today