ஈரோடு ஆக 12:
ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் சைமன் தொபியாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய தபால் துறை பல விதமான சேவைகளை வழங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச தபால் சேவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதில் தளர்வுகள் அளித்து தபால் துறை இயக்குனரகம் அறிவித்து உள்ளது. எனவே சர்வதேச விரைவு தபால், சர்வதேச பதிவு தபால், சர்வதேச பதிவு பார்சல் உள்ளிட்ட அனைத்து சர்வதேச சேவைகளும் மீண்டும் தொடங்கி உள்ளன. இதன் மூலம் 60 க்கும் மேற்பட்ட வெளி நாடுகளுக்கு பார்சல் சேவை வழங்கப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு தேவயைான உடைகள், மருந்துகள், மளிகை பொருட்கள் மற்றும் ஆவணங்களை தபால் பார்சல் சேவை மூலம் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today