ஈரோடு சூலை 10:

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெண்களுக்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல் துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போன்ற குற்றங்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை சரக துணை தலைவர் முத்துசாமி மற்றும் ஈரோடு எஸ்.பி., சசிமோகன் ஆகியோரின் ஆலோசனையின் படி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த மையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., கனகேஸ்வரி தலைமையில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களுக்கு பிரேத்யேக பயிற்சி வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today