சென்னிமலை அக் 4: ஈரோடு மாவட்டம்

சென்னிமலையில் கொடிகாத்த குமரனின் இல்லத்தில் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், திருமகன் ஈவெரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்து, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர், குமரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பேசியதாவது:கொடிகாத்த குமரனின் தியாகத்தை போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாக எடுக்கப்படுகிறது. அவரது நினைவை மக்கள் அறியச் செய்யும் வகையில் ஈரோட்டில் சம்பத் நகர் சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை’ என்ற பெயரை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, நேற்று அச்சாலை பெயர் சூட்டப்பட்டது. தியாகி குமரனுக்கு நிரந்தரமாக சிலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது, என்றனர்.சென்னிமலை ஒன்றிய தலைவர் காயத்ரி, பேரூராட்சி செயலாளர் ஆயிஷா, பி.ஆர்.ஓ., செந்தில்குமார், ஏ.பி.ஆர்.ஓ.,க்கள் பாலாஜி, கலைமாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.* சிவகிரியில் உள்ள குமரன் சிலைக்கும், சென்னிமலையில் உள்ள குமரன் வீட்டருகே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை நினைவு கூர்ந்தார்.மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/