ஈரோடு நவ 30:
கொரோனா தொற்று அடிக்கடி உரு மாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழகத்திலும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி உட்பட சில நாடுகளில் அதிகமுறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொற்று விரைவாக பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்க கூடிய தன்மை உடையது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உஷார் படுத்தப்பட்டு தங்கள் மாவட்டத்தில் தடுப்பு நாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக – கர்நாடக கடையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்காக பண்ணாரி, ஆசனூர், காரபள்ளம் ஆகிய 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் நகரிலுள்ள புளிஞ்சூர் பகுதியிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று சாம்ராஜ் நகர் கலெக்டர், புளிஞ்சூர் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் தமிழகத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடக மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. https://www.tnhealth.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/